ஆப்பிளின் #ShotOniPhone சேலஞ்ச்: வெற்றி பெற நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது #ShotOniPhone எனும் ஹேஸ் டேக்கில் புகைப்படப் போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது.

இப் போட்டியில் தமது ஐபோன்கள் ஊடாக எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை இணைத்துக்கொள்ள முடியும்.

இதன்போது 10 சிறந்த புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் ஆப்பிள் நியூஸ்ரூமில் அப் புகைப்படங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை பங்குபற்ற முடியும்.

பெப்ரவரி 26 ஆம் திகதி வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.

ஒவ்வொருவரும் தமது ஐபோனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை #ShotOniPhone எனும் ஹேஸ்டேக்கினை பயன்படுத்தி ஆப்பிளின் பேஸ்புக் பக்கம், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பகிர முடியும்.

இப் போட்டியில் பங்குபற்றுபவர்கள் நிச்சியம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் இப் போட்டியில் பங்குபற்ற முடியாது.

அத்துடன் புகைப்படங்களை எடிட் செய்து பயன்படுத்த முடியும். எனினும் இதற்காக ஆப்பிளின் டூல்களே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers