Apple TV சேவையின் மாதாந்தக் கட்டண விபரம் வெளியானது

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதமளவில் தனது ஒன்லைன் சேவையான Apple TV சேவையினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே செய்திகள்வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது குறித்த சேவையை பெறுவதற்கான மாதாந்த சந்தா தொகை விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி 15 அமெரிக்க டொலர்கள் செலுந்தி மாதாந்த சந்தாதாரர் ஆக முடியும்.

இதற்கு முன்னர் ஏறத்தாழ 10 டொலர்கள் வரை இருக்கும் என ஊகத்தின் அடிப்படையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

ஏற்கவே காணப்படும் Netfilix மற்றும் Amazon Prime சேவைகளுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுவதனால் பயனர்களை கவர புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை தொடர்பான தகவல்கள் எதிர்வரும் வாரங்களில் வெளிவரும் என நம்பப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers