உலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்

Report Print Kabilan in தொழில்நுட்பம்

சீனாவின் ஷாங்காய் 5ஜி நெட்வொர்க் சேவையை பெறும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 5ஜி தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக இருக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தரவிறக்கம் செய்யும் வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஷாங்காய் நகரில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட் பேண்ட் ஜிகாபிட் நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகிலேயே 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நகரம் எனும் பெருமையை பெற்றுள்ளது. சீனா மொபைல் சார்ந்து 5ஜி நெட்வொர்க் சோதனை, ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது.

இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி Space Station-களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங், 5ஜி சேவையில் முதல் வீடியோ கால் மேற்கொண்டார். இதற்கு அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினார்.

சீனாவின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை மையங்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் Install செய்யப்பட்டு வருகின்றன. ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனினும், ஹூவாய் நிறுவனம் சீன அரசாங்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers