சமூக வலைத்தள மோசடிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

உலகளவில் பரந்து உள்ளவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட சமூகவலைத்தளங்கள் இன்று அதிக அளவில் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஊடாகவே அதிகளவு மோடிகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் அதற்கு முன்னை வருடங்களில் மேற்கொள்ளப்பட்டவற்றினை விடவும் 43 சதவீதம் அதிகமானது என ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RSA எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மொபைல் சாதனங்களினூடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் 70 சதவீதத்தினை தொட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மோசடிகள் இவ் வருடமும் தொடரும் எனவும் முன்னைய வருடங்களை விடவும் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்