முடங்கிய யூடியூப், ஜிமெயில் சேவை மீண்டும் வழமைக்கு: காரணம் இதுதான்

Report Print Kavitha in தொழில்நுட்பம்

நேற்றைய தினம் கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் அமெரிக்காவில் முடங்கியுள்ளது.

எனினும் அவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளின் யூடியூப், ஜிமெயில், கிளவுட் மற்றும் G Suite போன்ற சேவைகள் தடைப்பட்டிருந்தன.

கூகுள் கிளிவுட் சேவை பாதிக்கப்பட்டமையினாலேயே ஏனைய சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக கூகுள் அறிவித்துள்ளது.

இதேவேளை ஸ்னாப் சாட்டும் இதே நேரத்தில் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இதனை அடுத்து பயனர்கள் #YouTubeDOWN #snapchatdown ஆகிய ஹேஷ் டேக்குகளை உருவாக்கி டுவிட்டரில் குறித்த சேவைகளின் ஸ்தம்பிதம் தொடர்பாக புகார்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers