குட்டி விமானம் மூலம் உணவு விநியோகம் : விரைவில் நடைமுறையில்

Report Print Kavitha in தொழில்நுட்பம்

ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும் காலம் மாறி, வீட்டிற்கே சாப்பாட்டை வரவைத்து உண்ணும் நிலை இன்று நடைமுறையில் வந்துவிட்டது.

அந்தவகையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை வாடிக்‌கையாளர்களிடம் கொண்டு சேர்க்க உபர் ஈட்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உணவகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சாப்பாட்டை ஆர்டர் செய்தால் டெலிவரி செய்யும் நிறுவனங்களுள் “ஊபர் ஈட்ஸ்” நிறுவனம், வாடிக்கையாளர் வ‌சப்படுத்தி அதிவிரைவாக உணவுப் பொருட்களை கொண்டு செல்லவே இந்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ பல்கலைக்கழகம் மற்றும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து அதற்கான சோதனை மேற்கொண்டது.

சோதனை ஓட்டம் வெற்றியடைந்த நிலையில் ஆளில்லா விமானம் மூலம் உணவு பெருட்களை வாடிக்‌கையாளர்களிடம் கொண்டு சேர்க்க “ஊபர் ஈட்ஸ்” நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் அந்த சோதனை வெற்றி பெற்றதால் பிற நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் இது தொடர்பாக பல்வேறு உணவகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் “ஊபர் ஈட்ஸ்” நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்