2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் ஐபோன் தொழில்நுட்பம் தொடர்பில் கசிந்த தகவல்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இன்னும் தனது ஐபோனை அறிமுகம் செய்யாத நிலையில் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகவுள்ள ஐபோன் தொடர்பிலும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

இதன்படி நெகிழும் தன்மை கொண்ட (Flexible) திரைகளை 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்கள் கொண்டிருக்கும் என குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரைகளாகவும் இவை இருக்கும்.

இந்த திரைகளை ஆப்பிள் நிறுவனம் LG நிறுவனத்திடமிருந்தே பெற்றுக்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிருந்த செய்தி ஒன்றில் 2020 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள ஐபோன்களில் முப்பரிமாண சென்சாரைக் கொண்ட கமெராக்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே நெகிழும் தன்மை கொண்ட திரை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இவற்றிற்கும் மேலாக 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்களிலேயே 5G தொழில்நுட்பமும் உள்ளடக்கப்படும் எனவும் நம்பப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers