கூகுளின் Pixel 4 கைப்பேசியில் தரப்படும் அதிடி தொழில்நுட்பம்: ஆப்பிள், சாம்சுங்கிற்கு பேரிடி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் Pixel எனும் தொடரில் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவருகின்றமை தெரிந்ததே.

இந்நிலையில் அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள Pixel 4 ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்துவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது.

இதன்படி Motion Sense எனும் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதனால் கைப்பேசியினை இயக்குவதற்கு தொடுகையோ அல்லது குரல்வழி கட்டளைகளையோ வழங்க தேவையில்லை.

அசைவுகள் மூலம் கைப்பேசியினை இலகுவாக இயக்க முடியும்.

இத் திட்டத்திற்கு Project Soli எனப் பெயரிட்டு கூகுளின் Advanced Technology and Projects குழு குறித்த வசதியினை உருவாக்கி வருகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்