அனிமேஷன் புரட்சியால் தனது முன்னைய சாதனையை தானே முறியடித்தது The Lion King

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

e Lion King எனும் காட்டு விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட The Lion King திரைப்படத்தினை தற்போதைய தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு அனிமேஷனின் உதவியுடன் மெருகூட்டி அண்மையில் மீண்டும் வெளியிடப்பட்டிருந்தது.

இத் திரைப்படம் ஆங்கிலம் மாத்திரமன்றி இந்தியாவில் தமிழ் உட்பட மேலும் சில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

11 தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இத்திரைப்படமானது தற்போது உலக அளவில் 1 பில்லியன் டொலர்களை வசூல் செய்துள்ளது.

இது 1994 ஆம் ஆண்டு வெளியான The Lion King ஈட்டிய வசூலினை விடவும் 60 மில்லியன் டொலர்கள் அதிகம் ஆகும்.

வயது வேறுபாடு இன்றி அனைவரையும் கவர்ந்துள்ள இத் திரைப்படும் மேலும் பல வாரங்கள் ஓடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வசூலும் பல மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்