2021 இல் ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

தற்போது ஹுவாவி, சாம்சுங் உட்பட பல நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளன.

எனினும் ஆப்பிள் நிறுவனம் இத் தொழில்நுட்பம் தொடர்பில் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது.

ஆனால் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் இத் தொழில்நுட்பத்தினை தனது சாதனத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத் தொழில்நுட்பமானது ஐபோன்களில் அல்லது ஐபேட்களில் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலை கடந்த புதன் கிழமை CNBC நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எனினும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்