Amazon Echo சாதன உற்பத்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

குரல்வழி கட்டளைகள் மூலம் பயனர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் செய்யக்கூடிய சாதனமாக Amazon Echo காணப்படுகின்றது.

இச் சாதனத்தினை சீனாவிலுள்ள Foxconn நிறுவனமே வடிவமைத்து வழங்கி வருகின்றது.

தற்போது இச் சாதன உற்பத்தி தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது Amazon Echo சாதனத்தினை உருவாக்குவதற்காக பல இளம் தொழிலாளர்கள் இரவு பகலாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்த China Labor Watch அமைப்பு புள்ளிவிபரங்களுடன் தகவலை வெளியிட்டுள்ளது.

இச் சாதன வடிவமைப்பில் பயிற்சி நிலையில் உள்ள சுமார் 1,500 இளம் தொழிலாளர்கள் வாரம் ஒன்றுக்கு 60 மணித்தியாலங்கள் எனும் அடிப்படையில் இரவு பகலாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 16 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers