வெப்பநிலை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தும் பசுக்கள்: தடுக்க புதிய நுட்பம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

உலக அளவில் சடுதியாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தினால் வறட்சிநிலை உருவாகி வருகின்றது.

இதனால் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதற்கு நிவாரணமாக மென்சிவப்பு நிற கடற்பாசியை பசுக்களுக்கு உணவாக வழங்கி வந்தால் அது காலநிலை மாற்றங்களுடன் போராடும் என அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பச்சை வீட்டு விளைவு வாயுக்களின் அளவை குறைக்கின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கியமாக மீதேன் வாயு உற்பத்தியை குறைக்கின்றது.

அதாவது காபனீரொட்சைட்டினை விடவும் மீதேன் வாயு 28 மடங்கு வெப்பநிலையை சூழலில் அதிகரிக்கக்கூடியது.

எனவே பசுக்கள் மீதேன் அளவு குறைந்த கழிவுகளை வெளியேற்றுவதால் சூழலில் வெப்பநிலையை குறைக்க முடியும் என நம்புகின்றனர்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்