பல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

தொடர்ச்சியாக 25 வருடங்கள் இயங்கிக்கொண்டிருந்த உலகின் முதலாவது வெப் கமெரா தற்போது நிறுத்தி வைக்கப்படவுள்ளது..

Fogcam என அழைக்கப்படும் இக் கமெரா 1994 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் நிறுத்திவைக்கப்படவுள்ளது.

காலநிலை மாற்றங்களை அவதானிப்பதற்காக சான்பிரான்சிஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் இக் கமெரா நிறுவப்பட்டிருந்தது.

தற்போது வேறொரு சிறந்த இடத்தில் நிறுவுவதற்காகவே நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கமெராவின் ஊடாக படம்பிடிக்கப்படும் காட்சிகள் http://www.fogcam.org/ இணையத்தளம் ஊடாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத் தளத்தில் 20 செக்கன்களுக்கு ஒரு தடவை காட்சிகள் அப்டேட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்