2020 ஒலிம்பிக் போட்டிகளில் மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

2020 ஆம் ஆண்டு ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது வீரர்களையும், பார்வையாளர்களையும் வரவேற்பதற்கான ரோபோக்களை டொயோட்டா நிறுவனம் வடிவமைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மின்கலங்களில் இயங்கக்கூடிய இலத்திரனியல் வானங்களையும், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக்கூடிய வாகனங்களையும் இப் போட்டியின்போது பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றினையும் டொயோட்டா நிறுவனமே வடிவமைத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வாகனங்கள் மற்றும் ஏனைய மொபைலிட்டி உபகரணங்கள் என மொத்தமாக 3,700 உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இவற்றில் 90 சதவீதமானவை எலக்ட்ரோனிக் முறையில் செயற்படக்கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்