ஆப்பிள் மடிக்கணினிகளை விமானங்களில் கொண்டு செல்ல தடை: அதிர்ச்சி காரணம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

முன்னணி இலத்திரனியல் நிறுவனமான ஆப்பிளின் தயாரிப்பான MacBook Pro மடிக்கணினிகளை விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னர் ஒரு சில நாடுகளின் விமான சேவை வழங்கும் நிறுவனங்களே இவ்வாறு தடையை பிறப்பித்திருந்தன.

எனினும் தற்போது உலகின் பல விமான சேவை நிறுவனங்கள் இந்த தடையினை அமுல்ப்படுத்திவருகின்றன.

குறித்த மடிக்கணினிகள் தீப்பற்றக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதே இந்த தடைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஜுன் மாதம் ஆப்பிள் நிறுவனமானது 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து MacBook Pro 15 அங்குல மடிக்கணினிகளையும் மீளப்பெறுவது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

குறித்த மடிக்கணினிகளில் உள்ள மின்கலங்களை மாற்றி வழங்குவதற்காகவே இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

எனினும் குறித்த மின்கலங்களே தீப்பற்றும் அல்லது வெடிக்கும் அபாயத்தை கொண்டிருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்