ஒன்லைன் ஹேம் பிரியர்கள்: புதிய மைல்கல்லை எட்டிய நாடு - எது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

உலக அளவில் இன்று கணினி ஹேம் பிரியர்களின் எண்ணிக்கை பல மில்லியனாக காணப்படுகின்றது.

இவர்களில் ஒன்லைன் ஊடாக கணினி ஹேமில் மூழ்கியிருப்பவர்களும் அடங்குவார்கள். இதில் சீனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அதாவது தற்போது சீனாவில் ஒன்லைன் ஹேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை 494 மில்லியனை எட்டியுள்ளது.

அதாவது ஏறத்தாழ அரை பில்லியனாகும். அத்துடன் இந்த எண்ணிக்கையானது அங்குள்ள நெட்டிசன்களில் 57.8 சதவீதமாகக் காணப்படுகின்றது.

இந்த தகவலை China Internet Development நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள Xinhua செய்தி நிறுவனம் இந்த 494 மில்லியன் ஹேம் பிரியர்களில் 468 மில்லியன் வரையானவர்கள் மொபைல் சாதனங்களை பயன்படுத்தி ஹேம் விளையாடுபவர்கள் எனுவும், இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்தினை விடவும் 9.23 மில்லியனால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...