8K தொழில்நுட்பம், 88 அங்குலம்: அசத்தலான Smart TV- விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

இதன் காரணமாக புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றின் வரிசையில் முதன் முறையாக 8K OLED தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் தொலைக்காட்சி ஒன்று அறிமுகம் செய்யப்படுகின்றது.

LG நிறுவனமே குறித்த தொலைக்காட்சியினை அறிமுகம் செய்கின்றது.

இதில் தரப்பட்டுள்ள 8K Ultra HD மற்றும் 7,680 x 4,320 Resolution என்பன Full HD தொழில்நுட்பத்தினை விடவும் 16 மடங்கு அதிக திறனுடையதாகவும், UHD தொழில்நுட்பத்தினைவிட 4 மடங்கு அதிக திறனுடையதாகவும் காணப்படுகின்றது.

தற்போது அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் இத் தொலைக்காட்சியினை கொள்வனவு செய்ய முடியும்.

இதன் விலை 42,000 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers