விமானங்களில் குழந்தைகளுக்காக ஜப்பான் அறிமுகம் செய்யும் புதிய திட்டம்: Baby Seat Map

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

விமானப் பயணங்களின்போது புதிதாக பிறந்த குழந்தைகளையோ அல்லது கைக்குழந்தைகளையோ கூட்டிச்செல்வது மிகவும் சவாலான காரியம் ஆகும்.

ஏன் சில சமயங்களில் வளர்ந்த சிறுவர்களுடன் பயணிப்பதுகூட சவால் நிறைந்தே காணப்படும்.

இவர்களால் பெற்றோருக்கு மாத்திரமன்றி மற்றைய பயணிகளுக்கும் தொந்தரவாகவே இருக்கும்.

இதனைக் கருத்தில்கொண்டு விமானங்களில் Baby Seat Map திட்டத்தினை கொண்டுவந்துள்ளது ஜப்பான்.

இதன் மூலம் குழந்தைகளுக்கான இருக்கைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை முற்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.

எனவே குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் குறித்த இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

அத்துடன் ஏனைய பயணிகள் குழந்தைகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட குழந்தைகளுக்கான இருக்கைகள் இருக்கும் இடத்தை தவிர்த்து ஏனைய இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

மேலும் இக் குழந்தைகளுக்கான இருக்கைகளை பிறந்த 8 நாட்கள் தொடக்கம் 2 வயது வரையான குழந்தைகளுக்காக பயன்படுத்த முடியும் என ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்