கூகுள் நிறுவனமானது கார் ஓட்டுனர்களுக்கு உதவக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது.
அதாவது கார் விபத்துக்கு உள்ளாகும் தருணத்தில் தானாகவே பொலிசாரின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உதவி கோராக்கூடியதாக இத் தொழில்நுட்பம் காணப்படும்.
இந்த தகவலை XDA Developers நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்காக விசேட சென்சார் ஒன்று பயன்படுத்தப்படுவதுடன் அது வேகமுடுக்கி (accelerometer) மற்றும் நுனுக்குபன்னி (microphone) என்பவற்றிலிருந்து தகவல்களை பெற்று கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பாக அறிந்துகொள்ளும்.
இத் தொழில்நுட்பமானது கூகுளின் Pixel 4 கைப்பேசியில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Pixel 4 கைப்பேசியானது இம் மாதம் 15 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.