கூகுள் மேப்பில் இனி இவை பற்றியும் தேடலாம்: அவசியம் அறிந்துகொள்ளுங்கள்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தின் மேப் சேவையில் ஏராளமான வசதிகள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றமை தெரிந்ததே.

இவற்றின் வரிசையில் தற்போது மற்றுமொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது பொது மலசலகூடங்கள் இருக்கும் இடங்களையும் இனி கூகுள் மேப்பில் தேடி அறிந்தகொள்ள முடியும்.

தற்போது இந்தியாவில் உள்ள சுமார் 2,300 நகரங்களில் உள்ள 57,000 பொது மலசலகூடங்கள் கூகுள் மேப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும் 2016 ஆம் ஆண்டில் பரீட்சார்த்த ரீதியாக டெல்லி, போபால் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை தற்போது மாதம் தோறும் 2.5 லட்சம் வரையிலான பயனர்கள் பொது மலசலகூடங்கள் பற்றி கூகுள் மேப்பில் தேடுவதாக கூகுள் மேப்பின் மூத்த புரோகிராம் மனேஜரான அனல் கோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்