லண்டனிலிருந்து சிட்னிக்கு 4 மணித்தியாலம்: ஹைப்பர்சொனிக் விமானம் தயார்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

மணிக்கு சுமார் 6,400 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பறக்கக்கூடிய என்ஜினின் உதவியுடன் ஹைப்பர் சொனிக் விமானம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் லண்டனிலிருந்து சிட்னியை வந்தடைய வெறும் 4 மணி நேரம் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானமானது 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கவல்லது.

எனினும் ப்ரீ கூலர் தொழில்நுட்பத்தின் ஊடாக ஒரு செக்கனில் இருபதில் ஒரு பங்கு நேரத்தில் -150 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை குறைக்கக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இவ் வகை விமானமானது அடுத்த வருடத்தில் சோதிக்கப்படவுள்ளது.

இதேவேளை வியாபார ரீதியாக குறித்த விமானங்களை இந்த தசாப்தத்தின் இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers