நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையை மேம்படுத்த புதிய சாதனம் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

நிலநடுக்கம், சுனாமி தொடர்பில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள் தற்போது காணப்படுகின்றன.

எனினும் இவற்றின் வினைத்திறன்கள் குறைவாகும்.

இதனால் தொடர்ந்தும் பாதிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன.

இதனைத் தடுப்பதற்காக வினைத்திறன் கூடிய நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை சாதனம் ஒன்றினை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

தென் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனை வடிவமைத்துள்ளனர்.

இச் சாதனமானது பூமியின் மேற்பரப்பிலோ அல்லது ஆழத்திலோ மிகவும் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இலகுவாக உணர்ந்து எச்சரிக்கை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்