பயனர்களுக்கு அதிர்ச்சி தரும் தனது நிலைப்பாட்டை மாற்றியது டுவிட்டர்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சமூகவலைத்தளமாக விளங்கும் டுவிட்டர் சில தினங்களுக்கு முன்னர் பயனர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தது.

இதன்படி சுமார் 6 மாத காலமாக தொடர்ச்சியாக பயன்படுத்தப்படாத டுவிட்டர் கணக்குகளை நிரந்தரமாக நீக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நடவடிக்கைக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

இதன் காரணமாக குறித்த கணக்குகளை நீக்கும் நடவடிக்கையினை டுவிட்டர் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

இந்நடவடிக்கையானது முதலில் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படவிருந்தது.

மேலும் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்கமைப்பின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருந்ததாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்