சைபர் தாக்குதல்களை இனங்காண்பதில் மந்த நிலை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

உலக நாடுகளில் பரவலாக சைபர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தியாவிலும் அதிகமாக காணப்படுகின்றது.

எனினும் குறித்த சைபர் தாக்குதல்களை இனங்காண்பதில் அங்குள்ள நிறுவனங்கள் மந்த நிலையில் செயற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சைபர் தாக்குதல்களை இனங்காண்பதற்கு சராசரியாக 222 மணித்தியாலங்களை அங்குள்ள நிறுவனங்கள் எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உலகிலுள்ள அனைத்து சைபர் தாக்குதல்களை இனங்காணும் நிறுவனங்களில் சராசரியிலும் அதிகமாகும்.

அதாவது உலகளவில் சைபர் தாக்குதல்களை இனங்காண்பதற்கு சராசரியாக 162 மணித்தியாலங்கள் எடுக்கின்றது.

அமெரிக்காவினை தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு நிறுவனமாக CrowdStrike மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்