முள்ளந் தண்டு வடத்தில் காயப்பட்ட நேயாளிகளுக்கு உதவும் ரோபோ

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கொலம்பியாவை சேர்ந்த பொறியலாளர்கள் குழு ஒன்று நவீன வகை ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

குறித்த ரோபோவானது முள்ளந் தண்டு வடத்தில் காயம்பட்டவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக சமநிலையும் பாதிக்கப்பட்டிருக்கும்.

எனவே இவர்கள் ஒரு இடத்தில் உட்காரும்போது விழுவதற்கான சாத்தியம் காணப்படும்.

இதனை தடுக்கும் வகையில் குறித்த ரோபோ செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

அதுமாத்திரமன்றி ஏனைய செயற்பாடுகளையும் சிரமமின்றி மேற்கொள்ள முடியும்.

இந்த ரோபோவினை வடிவமைத்த கொலம்பிய பொறியியலாளர் குழுவிற்கு இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்றே தலைமை தாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்