உலக தொழில்நுட்ப சந்தையை ஆட்டம் காணவைக்கும் கொரோனா வைரஸ்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

தொழில்நுட்ப உலகில் சீனாவின் பங்கு அளப்பரியதாகும். இப்படியிருக்கையில் அங்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது உலகளாவிய தொழில்நுட்ப சந்தையை ஆட்டம் காண வைத்துள்ளது.

சீனாவில் மாத்திரம் 48,206 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து தொழிற்சாலைகள் மற்றும் அலவலகங்கள் என அனேகமான பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கிருந்து இலத்திரனியல் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பிற நாடுகளில் இலத்திரனியல் சாதனங்களை சீனாவிற்கு இறக்குமதி செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம் மாதம் இடம்பெறவிருந்த மொபைல் வேர்ள்ட் கொங்கிரஸ் நிகழ்வும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்