கொரோனா வைரஸ் தொடர்பான விளம்பரங்கள்: பேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் தற்போது மிக வேகமாக பரவிவருகின்றது.

இந்நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்ட பல விளம்பரங்கள் பேஸ்புக் தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றில் மக்களுக்கு தவறான வழிநடத்தல்களை கொண்ட விளம்பரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த விளம்பரங்களை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதேவேளை சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸினால் 2,700 வரையானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி தற்போது மேலும் பல நாடுகளுக்கும் இவ்வைரஸ் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்