Amazon Web Services தொடர்பான மாநாடு ரத்துச் செய்யப்பட்டது

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

அமேஷான் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றான Amazon Web Services தொடர்பான மாநாடு ஒன்று மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெறவிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக குறித்த மாநாடு திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் ஆரோக்கியம் கருதி இவ்வாறு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதம் பார்ஸிலோனாவில் இடம்பெறவிருந்த மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வு உட்பட பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்துச் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்