தனது பணியாளர்களை இரு மடங்காக்கும் TikTok இன் தாய் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

தற்போது உலக அளவில் பிரபலம் அடைந்துள்ள டப்பிங் வீடியோ பகிரும் சேவையை வழங்கி வரும் TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ByteDance விளங்குகின்றது.

இந்நிறுவனத்திற்காக உலகெங்கிலும் தற்போது 60,000 வரையான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவ் வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கையினை ஏறத்தாழ இரு மடங்காக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது மொத்தமாக 100,000 பணியாளர்கள் வரை பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

இந்த உத்தரவினை குறித்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Zhang Yiming பிறப்பித்துள்ளார்.

சுமார் 78 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள இந்த நிறுவனம் 30 நாடுகளில் தனது கிளைகளை நிறுவியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்