கூகுள், பேஸ்புக், மைக்ரோசொப்ட் உட்பட ஒன்றாக இணைந்த 7 நிறுவனங்கள்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை நிறுத்தக்கூடிய சிகிச்சை முறைகளோ அல்லது மாத்திரைகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் நோய் தொற்றாமல் இருப்பதற்கான நடைமுறைகளே தற்போது பிற்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்நோய் தொடர்பான பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதனால் மக்கள் மேலும் அச்சமடைந்துவருகின்றனர்.

இதனைத் தடுப்பதற்கு கூகுள், பேஸ்புக், மைக்ரோசொப்ட், டுவிட்டர், ரெட்டிட், யூடியூப் மற்றும் லிங்ட்டின் ஆகிய 7 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.

மேற்கண்ட இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாகவே தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

எனவே கோவிட் - 19 தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவதற்காகவும், தவறான தகவல்கள் மேலும் பரப்பப்படுவதை தடுப்பதற்காகவும் கூட்டுமுயற்சியில் இந்நிறுவனங்கள் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்