சைபர் கண்காணிப்பில் மக்கள்: வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளும் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்திவருகின்றது.

எனினும் இந்த அறிவுறுத்தலை மீறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இவ்வாறானவர்களை கண்காணிக்க சைபர் கண்காணிப்பு முறையை இஸ்ரேல் அரசு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

இதற்காக ஒவ்வொருவரினதும் மொபைல் போன்கள் ட்ராக் செய்யப்படுகின்றது.

இதற்கான அனுமதியினை அந்நாட்டின் பிரதமர் Benjamin Netanyahu வழங்கியுள்ளார்.

இந்த டேட்டாவினை சுகாதார அமைச்சு பயன்படுத்தவுள்ளதுடன், வீட்டைவிட்டு வெளியேறுபவர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கவும் உள்ளது.

இதற்காக விசேடமாக 2,500 பாதுகாப்பு படையினர் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்