கூகுளில் Coronavirus என தேடினால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் கூகுளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான தகவல்களை அதிகம் தேடிப்பெற்றுக்கொள்கின்றனர்.

அதுமாத்திரமன்றி இணைய நிறுவனங்களுக்கும் கொரேனா தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய மற்றும் தகவல்களை மக்களுக்கு வழங்கவேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

இதனையடுத்து கூகுளில் Coronavirus அல்லது COVID - 19 என தேடினால் அதற்கான தகவல்களைக் காட்டக்கூடிய புதிய பகுதி ஒன்றினை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது தேடலுக்கான பெறுபேறுகள் காண்பிக்கப்படும் பகுதிக்கு வலதுபக்கமாக தனியான பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பிரிவில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றாற்போல் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை காண்பிக்கக்கூடிய வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கொரோனா அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்பவற்றிற்கான டேப்பும் (Tab) தரப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...