வேலை இல்லாமல் இருப்பவர்கள் தாராளமாக எங்களுடன் இணையலாம்... அமேசான் நிறுவனர் வெளியிட்ட தகவல்

Report Print Kavitha in தொழில்நுட்பம்

உலகின் ஆன்லைன் ஷாப்பிங் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெரோஸ் கொரோனா வைரஸால் வேலை இழந்தவர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உலகின் எல்லா தொழல்துறைகளும் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக உள்ள காரணத்தாலும் பல மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே நம்பியிருப்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறுவதாவது, “எங்கள் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நிறைய ஊழியர்கள் தேவை. அதுமட்டுமல்லாது பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகலாம்,அதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்கள் தாராளமாக எங்களுடன் இணைந்து பணியாற்றலாம், நாங்கள் நல்ல சம்பளம் தர தயாராக இருக்கிறோம்.

மேலும் நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தற்காலிகமாக எங்களுடன் சேர்ந்து உதவலாம்,” அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

View this post on Instagram

A message to all Amazon employees.

A post shared by Jeff Bezos (@jeffbezos) on

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...