நாளை முட்டாள்கள் தினம்: கூகுள் எடுத்துள்ள அதிரடி முடிவு

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் வருடம்தோறும் ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு தனது தேடற்பொறியில் சுவாரஸ்யமான தகவல்களை பதிவிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளது.

எனினும் வழமைக்கு மாறாக இவ் வருடம் இதனை தவிர்க்க முடிவு செய்துள்ளது.

தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டே மேற்கண்ட முடிவினை கூகுள் எடுத்துள்ளது.

இதேவேளை தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான பல தகவல்களை மக்களுக்கு வழங்கும் பணியில் கூகுள் முனைப்புக் காட்டிவருவதுடன், பல மில்லியன் டொலர்களை கொரோனா எதிர்ப்பு திட்டத்திற்காக வழங்கியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்