குறைந்த செலவில் விரைவாக கொரோனா வைரஸினை கண்டறிய இணையும் முன்னணி நிறுவனங்கள்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

இந்தியாவின் The Council of Scientific and Industrial Research (CSIR) விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனா வைரஸ் அறிகுறியை கண்டறியும் முயற்சியில் முன்னிணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

இதன்படி இந்தியாவில் உள்ள இன்டெல் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்திலுள்ள International Institute of Information Technology (IIIT) நிறுவனங்கள் இணைந்து செயற்படவுள்ளன.

இம் மூன்று நிறுவனங்களும் கொரோனா வைரஸின் ஜீனோமினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப சாதனத்தினை உருவாக்கவுள்ளன.

கொரோனா வைரஸினை கண்டறிய தற்போதுள்ள பொறிமுறைகள் மிகவும் செலவு கூடியவையாகவும், நீண்ட காலம் எடுப்பதாகவும் காணப்படுகின்றன.

இதனைக் கருத்திற்கொண்டே இப் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கப்படவுள்ளது.

இதேவேளை கொரொனா வைரஸ் எயிட்ஸ் போன்று ஆனது இனி உலகத்தை விட்டு நீங்காது எனவும், அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்