Bluetooth Chip தொழில்நுட்பம் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் முயற்சி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டுபிடிக்க பல்வேறு வழிமுறைகள் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றன.

எனினும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாறுபட்ட விதமாக கொரோனா வைரஸ் தொற்றினை கண்டுபிடிக்க எத்தனித்து வருகின்றன.

இதன்படி Bluetooth Chips தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றினை அடையாளம் காண்பதற்கு சிலிக்கன் வலியிலுள்ள நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.

Juniper Networks Inc எனும் நிறுவனமே சுமார் 10,000 பணியாளர்களை இத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரீட்சிக்க முடிவெடுத்துள்ளது.

பணியாளர்களில் பொருத்தப்பட்டிருக்கும் Bluetooth Chips உடன் Wi-Fi Router தொடர்புகொண்டு தரவுகளை சேகரிக்கும்.

இத் தரவுகளின் அடிப்படையில் குறித்த பணியாளர் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்