தமது கடவுச் சொற்களின் பாதுகாப்பு தொடர்பில் பயனர்கள் என்ன நினைக்கின்றார்கள் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனேகமானவர்கள் எதாவது ஒரு நோக்கம் கருதி ஒன்லைன் கணக்கினை பயன்படுத்தி வருகின்றனர்.

இக் கணக்குகளை பாதுகாப்பதற்கென கடவுச் சொற்களும் காணப்படுகின்றன.

இக் கடவுச் சொற்கள் பாதுகாப்பு அற்றது என 83 சதவீதமானவர்கள் எண்ணுவதாக ஆய்வு ஒன்றினூடாக அறியப்பட்டுள்ளது.

அத்துடன் தேவைக்கு ஏற்ப ஒன்றிற்கு மேற்பட்ட பல அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த நேருவதனல் வெவ்வேறு கடவுச் சொற்களை பயன்படுத்துவதிலும் அசௌகரியங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

எவ்வாறெனினும் கடவுச் சொற்களை குறித்த கால இடைவெளியில் மாற்றுவதன் மூலம் அவற்றின் உறுதித்தன்மையை பேண முடியும் என Kaspersky நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பயனர்கள் தமது கடவுச் சொற்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பயன்படுத்தும் கடவுச் சொல் முகாமைத்துவ சேவைகள் ஊடாகவும் கடவுச் சொற்கள் கசியக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்