ஆப்பிள் இயங்குதளத்தின் புதிய பதிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவித்தல்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுக்காக iOS எனப்படும் இயங்குதளத்தினை பிரத்தியேகமாக அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

இதற்கான புதிய பதிப்புக்களை ஒவ்வொரு வருடமும் அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் இவ் வருடம் iOS 14 எனும் மற்றுமொரு புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான நிகழ்வு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.

அதாவது Worldwide Developer Conference நிகழ்வில் உத்தியோகபூர்வமாக குறித்த இயங்குதளப் பதிப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் வருடத்தின் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் iPhone 12 சாதனமானது இவ் இயங்குதளப் பதிப்புடன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்