பறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

இன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன.

இவற்றில் பறவைகள் தொடர்பான ஆய்வுகளும் ஒன்றாகும்.

இந்நிலையில் ஒவ்வொரு பறவைகளையும் தனித்தனியாக கண்காணிப்பதற்கு விஞ்ஞானிகள் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

ஏற்கணவே GPS தொழில்நுட்பம் மூலம் பறவைகளின் இருப்பிடங்கள் அல்லது நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே இப் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

பறவைகள் தொடர்பிலான ஆய்வில் மனிதர்களால் மேற்கொள்ள முடியாத அம்சங்களை இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பிரான்சிலுள்ள Functional and Evolutionary Ecology (CEFE) அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்