TikTok நிறுவனத்தினை வாங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் அனுமதியை கோரும் மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

சீன நிறுவனமான பைட் டான்ஸினால் நிர்விக்கப்படும் பிரபல வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனாக டிக் டாக் காணப்படுகின்றது.

உலக அளவில் பில்லியன் வரையான பயனர்களைக் கொண்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனுக்கு சில நாடுகளில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக இந்தியா, அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களிற்கே டிக் டாக்கினை விற்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

குறிப்பாக மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கடந்த வாரம் தகவல் வெளியாகியிருந்தது.

இப்படியிருக்கையில் இந்த தகவலை மைக்ரோசொப்ட் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது டிக் டாக் நிறுவனத்தினை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி சத்திய நடெல்லா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி அளவில் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்