குறைந்த செலவில் இதய சத்திரசிகிச்சைகளை கண்காணிக்க அதிநவீன சாதனம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

மனித உடலில் மேற்கொள்ளப்படும் ஆபத்தான சத்திரசிகிச்சைகளில் திறந்த இதயச் சத்திரசிகிச்சையும் ஒன்றாகும்.

இதனை கண்காணிப்பதற்கு தற்போது பயன்படுத்தும் பொறிமுறையினைக் காட்டிலும் செலவு குறைந்த நவீன சாதனம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology (SCTIMST) ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர்.

இதய சத்திரசிகிச்சையின்போது இரத்த ஓட்டத்தினை அளந்து கண்காணிக்க பயன்படும் இச் சாதனமானது ஒருவரின் உள்ளங்கை அளவே உடையதாகும்.

இதற்கு முன்னர் இவ்வாறான சத்திரசிகிச்சையின்போது இரத்த ஓட்ட கண்காணிப்பு பொறிமுறைக்கு 25 தொடக்கம் 30 இலட்சம் இந்திய ரூபாய்கள் வரை செலவாகும்.

எனினும் இப் புதிய சாதனத்தின் உதவியுடன் காண்காணிப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்களே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்