செப்டெம்பர் மாத சென்டிமென்ட்டை மாத்தாத ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

உலகின் முதற்தர இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக ஆப்பிள் விளங்குகின்றது.

இந்நிறுவனம் தனது ஐபோன்களை ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் இவ் வருடமும் தனது நிகழ்வினை செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

உலக அளவில் காணப்படும் கொரோனா அனர்த்தம் காரணமாக ஐபோன் 12 அறிமுகம் பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிகழ்வில் புதிய ஐபோன் சாதனங்கள் உட்பட மேலும் சில புதிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்