முகக் கவசத்தினை சொந்தமாகத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

அண்மையில் சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கமானது இன்று உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது.

இதுவரை தொடர்ந்துவரும் தாக்கத்தினால் மக்கள் முகக்கவசங்களை அணிந்தவாறே வெளியிடங்களிற்கு சென்று வருகின்றனர்.

அதேபோன்று பிரபல நிறுவனங்களும் தமது பணியாளர்களின் ஆரோக்கியத்தினை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இப்படியான நிலையில் ஆப்பிள் நிறுவனம் சொந்தமாகவே முகக் கவசத்தினை தயாரிக்கவுள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவை ஆப்பிள் நிறுவனப் பணியாளர்களுக்கு மாத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று படைகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ள குறித்த முகக் கவசங்கள் வெளியிலிருந்து வரும் துகள்களையும், உள்ளிருந்து வெளியேறும் துகள்களையும் வடிகட்டக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்