ஸ்மார்ட் கைப்பேசி ஏற்றுமதியில் சீனாவிற்கு ஏற்பட்டுள்ள சங்கடமான நிலை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சீனாவின் கைப்பேசி ஏற்றுமதியானது 15.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சீன அரசு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களுடன் ஒப்பிடும்போதே இந்த வீழ்ச்சி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சுமார் 33 மில்லியன் வரையான கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

எனினும் ஜுலை மாத்தில் ஏற்றுமதியானது 24.4 மில்லியன்களாகவே காணப்பட்டுள்ளது.

இந்த வீழ்ச்சியானது மே மாதத்திலிருந்து ஆரம்பித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அம் மாதத்தில் 10 சதவீத வீழ்ச்சியையும், ஜுன் மாதத்தில் 16 சதவீத வீழ்ச்சியையும், ஜுலை மாதத்தில் 35 சதவீத வீழ்ச்சியையும் எதிர்நோக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்