டிக் டாக் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள அதிரடிக் கருத்து

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

சீன நிறுவனமான பைட் டான்ஸ்சினால் உருவாக்கப்பட்ட டிக் டாக் அப்பிளிக்கேஷனை தடை செய்வதில் அமெரிக்க அதிபர் விடாப்பிடியாக இருக்கின்றார்.

எனவே குறித்த நிறுவனத்தினை வேறு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டிய நிலையில் அல்லது மூட வேண்டிய நிலையில் டிக் டாக் காணப்படுகின்றது.

இதற்காக கால எல்லையாக செப்டம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக் கால அவகாசம் மேலும் நீடிக்கப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இக் காலப் பகுதிக்குள் வேறு அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யவில்லையாயின் அமெரிக்காவில் முற்றாக டிக் டாக் தடை செய்யப்படும்.

எவ்வாறெனினும் குறித்த கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்களே இருப்பதனால் என்ன நடக்கப்போகின்றது என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்