உலகின் மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வேர்க் தொடர்பில் மைக்ரொசொப்ட் எடுக்கப்போகும் நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

உலகில் உள்ள சனத்தொகையில் ஏறத்தாழ அரைப் பங்கினர் இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை இவர்களது தகவல்களை திருடும் சைபர் கிரைம்களும் அதிகரித்துள்ளன.

இதற்காக பல்வேறு சைபர் கிரைம் கும்பல்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகின்றன.

இவற்றில் மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வேர்க்கினை செயலிழக்க வைக்க மைக்ரேசொப்ட் நிறுவனம் சட்டரீதியான செயற்பாடுகளில் இறங்கவுள்ளது.

குறித்த நெட்வேர்க்கினால் மக்களின் வங்கி கணக்குகளை திருடுதல் மற்றும் ரன்சம்வேர்களை பரப்புதல் என்பவற்றிற்காக சுமார் ஒரு மில்லியன் வரையான கணினிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நெர்வேர்க் ஆனது அமெரிக்காவில் இடம்பெறவுள்ள தேர்தலிலும் மிகப்பெரிய பிரச்சினையாக விளங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்