ஒன்லைன் சொப்பிங் பிளாட்போஃர்மினை உருவாக்கும் முயற்சியில் யூடியூப்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

இணைய வளர்ச்சியைத் தொடர்ந்து ஒன்லைன் சொப்பிங் சேவையும் பிரபலமடைந்து காணப்படுகின்றது.

இந்நிலையில் யூடியூப் நிறுவனமும் சொந்தமாக ஒன்லைன் சொப்பிங் பிளார்ட்போஃர்ம் ஒன்றினை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூப்பின் விளம்பர சேவையின் ஊடாக அமேஷான் போன்ற ஒன்லைன் விற்பனை நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட இணைப்புக்கள் மூலம் (referral links) வருமானம் ஈட்டி வருகின்றன.

இச் செயற்பாட்டில் மாற்றம் ஒன்றினைக் கொண்டுவர தீர்மானித்துள்ள நிலையிலேயே யூடியூப் ஒன்லைன் சொப்பிங் தளம் ஒன்றினை ஆரம்பிக்க எண்ணியுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் யூடியூப் வீடியோக்களில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதன் ஊடாக நேரடியாகவே பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்