ஒன்லைன் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் சேவையை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாக Dropbox காணப்படுகின்றது.
இதில் புதிய Dropbox Family திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 2TB வரையான சேமிப்பு வசதி வழங்கப்படும்.
இதற்காக மாதாந்தம் 17 டொலர்கள் மாத்திரமே அறவிடப்படவுள்ளது.
எனினும் குறித்த 2TB சேமிப்பகத்தினை அதிகபட்சமாக குடும்பம் ஒன்றிலுள்ள 6 அங்கத்தவர்கள் பகிர்ந்துகொள்ள முடியும்.
இவர்கள் அனைவரும் தமக்கான சொந்த கணக்கினை கொண்டிருக்க முடிவதுடன், புகைப்படங்கள் உட்பட ஏனைய கோப்புக்களை சேமிக்கவும் முடியும்.
தவிர கணினியிலுள்ள தகவல்களை பேக்கப் செய்துகொள்ளவும் முடியும்.