பயனர்களை தம்வசப்படுத்தி வைத்திருப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதிகளை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக Facebook Dating எனும் வசதியினையும் அறிமுகம் செய்கின்றது.
இவ் வசதியானது தற்போது ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் மாத்திரம் அறிமுகம் செய்யப்படுகின்றது.
அதாவது Austria, Belgium, Bulgaria, Cyprus, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Croatia, Hungary, Ireland, Italy, Lithuania, Luxembourg, Latvia, Malta, Netherlands, Poland, Portugal, Romania, Sweden, Slovenia, Slovakia, Iceland, Liechtenstein, Norway, Spain, Switzerland மற்றும் United Kingdom போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ் வசதியில் காணப்படும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.