தற்போது வீட்டிலிருந்து பணிபுரிதல் எனும் செயற்பாடானது வெகுவாக அதிகரித்துள்ளது.
இதற்கு கொரோனா தாக்கமே காணரம் ஆகும்.
இச் செயற்பாட்டிற்காக Zoom அப்பிளிக்கேஷன், கூகுள் நிறுவனத்தின் கூகுள் மீட் அப்பிளிக்கேஷன் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Microsoft Teams என்பன அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்படியிருக்கையில் Microsoft Teams சேவையை நாள்தோறும் 115 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத்தில் 72 மில்லியன் பயனர்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது 115 மில்லியன் எனும் மைல்கல்லினை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கூகுள் மீட்டினை சராசரியாக நாள் ஒன்றிற்கு 100 மில்லியன் பயனர்களும், Zoom சேவையினை நாள் ஒன்றிற்கு 300 மில்லியன் பயர்களும் பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.